திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும்
காதில் விடு தோடும் இட்டு,
சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி,
சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை;
பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும்
தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி