உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு
நொடியில் உழல்வானை, உலப்பு இல் செல்வம்
சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவை, திருச்
சிராப்பள்ளி எம் சிவலோக(ன்)னை,
கலந்தார் தம் மனத்து என்றும் காதலானை,
கச்சி ஏகம்பனை, கமழ் பூங்கொன்றை
நலம் தாங்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தஆறே!.