திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்;
கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்;
மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;
விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான்
கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி