திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்;
கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்;
படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று
அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்;
அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்;
அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்;
கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி