திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்;
மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;
பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;
பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;
செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;
திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;
கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி