திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்;
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்;
நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்;
நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்;
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்;
கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்;
குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி