பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம் தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை, சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.