பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த! கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற, வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.