திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ, வஞ்சகர்கள் கூடி,
தங்கள் மேல் அடராமை, “உண்!” என, உண்டு இருள் கண்டன்;
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்,
“எங்கள் ஈசன்” என்பார்கள் எம்மையும் ஆள் உடையாரே.

பொருள்

குரலிசை
காணொளி