திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு;
பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்;
அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
“எந்தை” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

பொருள்

குரலிசை
காணொளி