பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும், கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும், ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும், ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும், விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும், முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த, அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும், ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும், நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும், ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும், செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும், வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும், தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும், தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க, ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும், சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும், வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும், ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்; கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்; குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்; அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும், ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும், ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும், ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும், காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும், கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும் பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும் ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை; தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்; முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.
வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர் தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர் பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு- ஆரமும் பூண்பர்-அரநெறியாரே.
தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர் வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும் துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும் அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே.
விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம் கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும் அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.
துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம் தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.
கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள் பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து ஆடு அரவத்தர் -அரநெறியாரே.
கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்; பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும் ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி நாட வல்லார்; வினை வீட வல்லாரே.
பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை, மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி காலையும் மாலையும் கை தொழுவார் மனம் ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.
முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின் பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்; படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே.
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல், மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும் அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து, கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.