திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன்;
பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன்; என் எம்பிரான்,
மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.

பொருள்

குரலிசை
காணொளி