பாரார், விசும்பு உள்ளார், பாதாளத்தார், புறத்தார்,
ஆராலும் காண்டற்கு அரியான்; எமக்கு எளிய
பேராளன்; தென்னன்; பெருந்துறையான்; பிச்சு ஏற்றி,
வாரா வழி அருளி, வந்து, என் உளம் புகுந்த
ஆரா அமுது ஆய், அலை கடல்வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண்; அம்மானாய்!