பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை, சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின் மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை, நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை, தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும் ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!