பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து, பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து, திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.