பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம் நெகா நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! இனித்தான் வாழ்ந்தாயே? ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தை, கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு, என்றோ கூடுவதே?