பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை; நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில் உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!