பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்! போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்! ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில், சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.