பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு பூசினீர்! வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்! இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில், புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.