பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப் பள்ளியுள் அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!