திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப் பள்ளியுள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!

பொருள்

குரலிசை
காணொளி