பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை, கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும், வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப் பள்ளியுள் செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!