திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன்
கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து
ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை
மைந்தனே.

பொருள்

குரலிசை
காணொளி