திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி
நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள்
ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை
வீடவே!

பொருள்

குரலிசை
காணொளி