திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை
கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள்
சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன்
கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை
கூத்தனே.

பொருள்

குரலிசை
காணொளி