திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து
எல்லி வந்து, இடுகாட்டு எரி ஆடுவான்-
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்;
அல்லல் தீர்த்து, எனை, “அஞ்சல்!” எனும்கொலோ?

பொருள்

குரலிசை
காணொளி