திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி
வைத்தீர்
இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது
ஒன்றே?
பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!