பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி, புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே? கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம் அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே!