பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்; சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்; போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா, வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.