காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை
புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து
பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம்
மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர்
அதுவே.