திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை
ஆளும் இறைவன்,
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த
இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி,
விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர்
அதுவே.

பொருள்

குரலிசை
காணொளி