கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல்
ஆடல் புரிவோன்;
ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர்
தலைவன்; ஊர்
வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி,
வார்
தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர்
அதுவே.