மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை
இமையோர்
ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-
வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை
மொழியும்
தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர்
அதுவே.