கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி,
கொக்கு இறகொடும்,
வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன்
ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம்
விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு
தேவூர் அதுவே.