திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள்
நெரிய,
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும்
முரவம்,
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர்
அதுவே.

பொருள்

குரலிசை
காணொளி