திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய்
நுரைகள் உந்தி,
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின்,
நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

பொருள்

குரலிசை
காணொளி