திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ் கதலி மாடே
வந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட,
கொந்து வார் குழலினார் குதி கொள் கோட்டாறு சூழ்
கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

பொருள்

குரலிசை
காணொளி