மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட
மிண்டி
சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில்
கொச்சை தன்பால்,
உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம்
அறுத்த,
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!