அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று,
அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு
செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!