கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில் கூடி, மந்தி
கண்ட வார்கழை பிடித்து ஏறி, மா முகில்தனைக் கதுவு
கொச்சை,
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய, ஆலம்
உண்ட மா கண்டனார் தம்மையே உள்கு, நீ! அஞ்சல்,
நெஞ்சே!