திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்;
பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார்
மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.

பொருள்

குரலிசை
காணொளி