மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை
ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர்
தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
வீடுமே.