திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்,
அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண்,
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு
நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.

பொருள்

குரலிசை
காணொளி