கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு
ஆர்த்து,
நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின
ஓடுமே.