தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை
போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
எதிர்கொளவே.