விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ,
பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி
தேர்ந்து,
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு
இடம்போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.