நீர் புல்கு புன்சடை நின்று இலங்க, நெடு வெண்மதி சூடி,
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து, தலை ஆர்
பலி தேர்வார்
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.