வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி, விரிபுன்சடை தாழ,
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும், துணையார்,
பலி தேர்ந்து,
அம் சுரும்பு ஆர் குழல் சோர, உள்ளம் கவர்ந்தார்க்கு
இடம்போலும்
பஞ்சுரம் பாடி வண்டு யாழ்முரலும் பரிதி(ந்) நியமமே.