வாள்முக, வார்குழல், வாள்நெடுங்கண், வளைத் தோள்,
மாது அஞ்ச,
நீள் முகம் ஆகிய பைங்களிற்றின் உரி மேல் நிகழ்வித்து,
நாண் முகம் காட்டி, நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.