அரவு ஒலி, வில் ஒலி, அம்பின் ஒலி, அடங்கார் புரம்
மூன்றும்
நிரவ வல்லார், நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதி சூடி,
இரவு இல் புகுந்து, என் எழில் கவர்ந்த இறைவர்க்கு
இடம்போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதி(ந்) நியமமே